பக்கங்கள்

புதன், 25 ஜனவரி, 2017

திருக்கேதீஸ்வரம்

திருக்கேதீஸ்வரம்

பண் : நட்டராகம

விருதுன்றா மேருவினாணர வாவனலெரியம்பாப்

பொருதுமூவேயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி பெந்நாளும்

கருகின்றவூர் கனைகடற்கடிகமழ் பொழிலணி மாதோட்டம்

கருதநின்றகே தீச்சரங்கை கைதொழக் கடுவினையடையாவே



பாடல்வீணையர் பலபலசரிதைய ரெருகைத் தருநட்டம்

ஆடல்பேணுவ ரமரர்கள் வேண்டநஞ சுண்டிருள் கண்டத்தார்

ஈடமாவது விருக்கடற்கரையினி லெழிற்கழ் மாதோட்டங்

கேடிலாதகே தீச்சரந்தெழக் கெடுமிடர் வினை தானே



பெண்ணொர்பாகத்தர் பிறைதவழ்சடையின் ரறைகழல் சிலம்பார்க்கச்

சுண்ணமாதரித் தாடுவர்பாடுக ரகந்தொறு மிடுபிச்சைக்

குண்ணலாவதோ ரிச்சையினுழல்பவ ருயர்தரு மாதோட்டத்

தண்ணன்ணுகே தீச்சரமடைபவர்க் கருவினை யடையாவே



பொடிகொண்மேனியர் புலிதளரையினர் விரிதருகரத்தோறும்

வடிகொண்மூவிலை வேலினர் நூலினர் மறிகடன் மாதோட்டத்

தடிகளாதரித்திருந்த திருக்கேதீச்சரம் பரிந்த சிந்தையராகி

முடிகள் சாய்த்தடி பேணவல்லார்தம்மேன் மொய்தெழும் வினைபோமே



நல்லராற்றவு ஈனநன்குடையர் தம்மடைத்தவர்க் கருளிய

வல்லர்பார்மிசை வான்பிறப்பிறப்பிலர் மலிகடன் மாதோட்டத்

தெல்லையில்புக ழெந்தைகேதீச்சர மிராப்பகநினைந்தேத்தி

அல்லலாசறுத் தரனடியினை தொழு மரன்பரா மடியாரே.



பேழைவார்சடைப் பெருந்திருமகடனைப் பொருத்த வைத்தொருபாகம்

மாழையற்கயற் கண்ணிபாலருளிய பொருளினர் குடிவாழ்க்கை

வாழையம்பொழின் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டங்

கேழல்வெண்மருப் பணிந்த நீண்மார்பர்கே தீச்சரம்பிரியாரே.





பண்டுநால்வருக் கறமுலைத்த தருளிப்பல் லுலகினி லுயிர்வாழ்க்கை

கண்டநாதனார் கடலிடங்கைத்தொழக் காதலித்துறைகோயில்

வண்டுபண்செயு மாமலர்ப்பொழின் மஞ்ஞை நடமிடுமாதோட்டம்

தொண்டர் நாடொறுந் துதிசெயவருள்செய் கேதீச்சரத்தானே



தென்னிலங்கையர் குலபதிமலை நலிந்தெடுத்தவன் முடிதிண்டோ

டன்னலங்கெட வடர்த்தவற் கருள்செய்த தலைவனார்கடல்வாயப்

பொன்னிலங்கிய முத்துமாமணிகளும் பொருந்தியமாதோட்டத்

துன்னியன்பொடு மடியவரிறைஞ்சுகே தீச்சரத்துள்ளாரே.



பூவுளானும் பொருகடல் வண்ணனும் புவியிடந்தெழுந்தோடி

மேவிநாடின் னடியினை காண்கிலா வித்தக மென்னாகும்

மாவும் பூகமும் கதலியுநெருங்குமா தோட்ட நன்னகர்மன்னித்

தேவி தன்னொடுந் திருந்துகேதீச்சரத் திருந்த வெம்பெருமானே.



புத்தராய்ச்சில புனைதுகிலுடையவர் புறனுரைச் சமணாதர்

எந்தராகிநின் றுண்பவரியம்பிய வேழைமை கேளேன்மின்

மத்தயானையை மறுகிடவுரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்

தத்தர்மன்னுபா லாவியின் கரையிற்கே தீச்சரமடைமின்னே.



மாடெலாமண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டத்

தாடலேறுடை யண்ணல்கேதீச்சரத் தடிகளை யணிகாழி

நாடுகளார்க்கின்ற ஞானசம்பந்தன்சொன் னவின்றெழுபாமாலைப்

பாடலாயின பாடுமின்பத்தர்கள் பரகதிபெறலாமே.



திருச்சிற்றம்பலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக