பக்கங்கள்

சனி, 14 ஜனவரி, 2017

ஆலய நிர்வாகம் ஆற்றவேண்டிய பணிகள்

ஆலய நிர்வாகம் ஆற்றவேண்டிய பணிகள்
1. நித்திய, நைமித்திய பூசைகள், அலங்காரத் திருவிழாக்கள் போன்றவற்றைத் தகைமை வாய்ந்த பூசகர்கள் சிவாச்சாரியார்கள் மூலம் நடாத்துதல்.
2. வருடம் முழுதும் நித்திய பூசைகளைத் தினமும் நேரம் தவறாது குறிப்பிட்ட நேரத்தில் சைவாகம விதிப்படி நடாத்த ஒழுங்குகள் செய்தல்.
3. கோவில் திருப்பணி வேலைகளை உரிய காலத்தில் செய்து அதற்குரிய சடங்குகளையும் செய்தல்.
4. மூலமூர்த்திகளின் சந்நிதிகளை எப்பொழுதும் உள்ளும் புறமும் பரிசுத்தமாக இருக்கும் பொருட்டு கண்காணித்தல்.
5. சுவாமி எழுந்தருளும் தேர், சப்பறம், சகடை வாகனங்கள் போன்றவற்றை உரிய காலத்தில் திருத்திப் புதுப்பித்து அவை பழுதுறா வண்ணம் பாதுகாப்பான இடத்தில் வைத்தல்
6. கோவிலுக்கு வேண்டிய பொருட்கள் உபகரணங்களைக் குறைவின்றி சேமித்து வைத்தல்
7. காகம், புறா, குரங்கு, எலி, அணில் போன்றவற்றால் அசுத்தமும் சேதமும் ஏற்படாவண்ணம் பாதுகாத்தல்
8. கோவில் பூசகர், அர்ச்சகர், ஊழியர், காவலர் போன்றோரின் ஊதியங்களை உரிய காலங்களில் தவறாது கொடுத்தல்
9. கோவிலுக்குரிய நிதி, பொருள் போன்றவற்றை நேர்மையாகவும் நீதியாகவும் கையாண்டு அதற்கு எதுவித பங்கமும் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ளல்
10. கோவில் திருவிழா போன்ற விசேஷ காலங்களில் சிற்றின்ப உணர்ச்சிகளை ஊட்டக் கூடிய கேளிக்கைகளைத் தவிர்த்து பேரின்பப் பெருவாழ்வுக்கு வழிகாட்டக் கூடிய நிகழ்ச்சிகளை நடாத்துதல்
11. கூட்டுப் பிரார்த்தனை, பஜனை போன்றவற்றை உரிய நேரகாலத்தில் நடாத்துதல்
12. கோவிலில் பக்தி நெறியூட்டும் பாடல்களை மட்டும் ஒலி பரப்புதல்
13. மது போதையிலும் மாமிசபோசனம் உண்டவுடனும் தலைவிரி கோலத்துடனும் கோவிலினுள் புகுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளுதல்
14. ஆசாரமில்லாமலும் வாயில் வெற்றிலை பாக்கு, புகைத்தலுடனும் பாதணி சட்டை அணிந்து கொண்டும் கோவிலுள் புகாவண்ணம் தவிர்த்துக் கொள்ளுதல்
15. தொற்று வியாதியஸ்தர், ஆசௌசம் உடையோர்களை உட்புகாவண்ணம் தடுத்தல்.
16. சுகல பக்தர்களும் சுவாமி தரிசனம் பெறும் பொருட்டு ஆண், பெண் இரு பாலாரும் இரு பக்கங்களிலும் நின்று தரிசனம் செய்ய ஒழுங்கு செய்தல்.
17. ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டும் தள்ளிக் கொண்டும் போகா வண்ணம் பார்த்துக் கொள்ளல்
18. இறைவன் புகழ் பாடுதலின்றி வீண்வார்த்தை பேசாதிருக்கச் செய்தல்
19. கோவில் பூசகரால் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் வீபூதி, சந்தனம், குங்குமம், பத்திர புஸ்பங்கள் போன்ற பிரசாதங்களின் மிகுதியை பவுத்திரப்படுத்தும் முறையில் பாத்திரங்கள் அமைதல்
20. அசுத்தங்களைப் போடுவதற்கு ஏற்ற முறையில் ஆங்காங்கு குப்பைத் தொட்டிகளை அமைத்தல்
21. கோவிலுக்குள் பக்தர்கள் கால்களைக் கழுவி ஆசமனஞ் செய்யும் பொருட்டு நீர் நிலைகளை அமைத்தல்
22. கோவிலின் புறப்பகுதியில் மலசலகூடங்களை அமைத்தல்
23. மகேசுவரர் பூசை அன்னதானம் போன்றவற்றை நடாத்துவதற்கு ஏற்ற முறையில் திருமடங்களை அமைத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக