கேதார கௌரி விரதம் அனுட்டிக்கும் தினங்கள்
புரட்டாதி மாதத்திலே சுக்கிலபட்சம் அட்டமி முதற் கிருஷ்ண பட்ச சதுர்த்தசி ஈறாக இருபத்தொரு நாளாயினும் கிருஷ்ண பட்சப் பிரதமை முதற் சதுர்த்தசியீறாகிய பதினான்கு நாளாயினும் கிருஷ்ணபட்ச அட்டமி முதற் சதுர்த்தசியாகிய ஏழு நாளாயினும் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதார கௌரி விரதத்தை அனுட்டித்தற்குரிய தினங்களாகும்.
விரதமாவது யாது?
மனம், பொறி, வழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் இறைவனை விதிப்படி மெய்யன்போடு விசேஷமாக வழிபடுதல்
இவ்விரதத்தை அனுட்டிப்போரின் தகைமை
ஐந்து மாதங்களுக்கு கர்ப்பிணியாக இல்லாத பெண்களும், மாதவிலக்கு நீங்கப் பெற்ற பெண்களும் இருபத்தொரு நாட்களும் விரதமிருக்கலாம். மற்றப் பெண்கள் மாதவிலக்கு இம்முறை வந்தபின் அமாவாசை திதிக்கு முன்னுள்ள ஒன்பது நாட்களோ, மூன்று நாட்களோ அல்லது அன்றாவது இவ்விரதத்தை அனுஷ்டித்து இருபத்தொரு முடிச்சிடப்பட்ட கயிற்றை இடது புயத்திலோ அல்லது இடது மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம். ஆண்களும் இவ்விரதத்தைப் பின்பற்றலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக