பக்கங்கள்

சனி, 28 ஜனவரி, 2017

ஒரு இளமலரின் இறுத்திப்பயணம்..

ஒரு இளமலரின் இறுத்திப்பயணம்..


ஆறில் சாகலாம் - அறியாத வயது, அறுபதில் சாகலாம் - அனுபவித்த வயது,

பதினாறில்சாவது கொடுமை, இப்படி ஒருவழக்கு தமிழில் உண்டு.


அந்தக்கொடுமை அமரர் சிவகௌரிக்கு நேர்ந்துவிட்து.


முதற்பிள்ளையை முத்தமிடும் கனவுடன் அவள் கருச்சுமந்த வேளையில்


அவளின் கனவுகளை மட்டுமல்ல அவளின் உயிரையும் காலன்


பறித்தெடுத்த கொடுமை நிகழ்ந்தேறிவிட்டது.


நோயால் அவள் பட்டவேதனையை உணர்ந்து நாம் துடித்தோம்.


அவளின் பிரிவால் நாம்படும் வேதனையை உணர அவள் இன்று உயிருடன் இல்லை.


இதயங்களால் தாங்க முடியாத வலிஅவளின் பிரிவு.


ஆனால் தாங்கித்தான் ஆகவேண்டும்.


அவளின் உயிர் பிரியும் அந்தக்கணத்தை அவளின் வயிற்றில் வளரும் சிசுவுக்காக


ஒத்திவைத்த மருத்துவர்கள் பெரும் போரையே நடத்தினார்கள்.


ஆனால் -


அப்போரில் 59ம் நாள் காலன் வென்றுவிட்டான்.


நெஞ்சங்களில் குருதிவழிய திரும்பி வர முடியாத தொலைவுக்குப் போய்விட்டாள்.


புற்று நோயால்; இறப்பவர் கோடிக்கு ஒருவர் என்ற நிலைபோய்


இலட்சத்துக்கு ஒருவராகி ஆயிரத்துக்கு ஒருவராக பெருகிவிட்டது.


புகைத்தல் புற்று நோய்க்கு காரணமாகலாம் என கண்ட இடமெல்லாம் விளம்பரங்கள்.


புகைப்பிடிப்பவர்கள் அருகில் கூட நின்றறியாள்.


மாமிச உணவைக்கூட நினைத்துப்பார்த்ததில்லை. மரக்கறி உணவை உண்டு வளர்ந்தவள்.


நாம் உண்ணும் அரிசியிலிருந்து மரக்கறி வரை நஞ்சூட்டப்படுகிறது.


இரசாயன பசளைகளும் கிருமி கொல்லிகளும் பயிர்களை நோய்வழங்கிகளாக மாற்றிவிட்டன.


எங்கள் உடல்களோ நோய்கள் குடியேறி கொலைக்கூத்தாடும் கூடாரங்கள் ஆகிவிட்டன.


யமக்கிரர்கள் பாசக்கயிறு கொண்டு உயிர்களை பறிக்கும் காலம் மலையேறிப் போக


பெரும் பசளை கிருமி உற்பத்தி நிறுவனங்கள் லாபக் கயிறு கொண்டு


எங்கள் உயிர்களை பறிக்கின்றன.


எங்கள் உயிர்கள் நோய்களுக்கு விருந்தாகி விடுகின்றன.


எல்லோரும் அறிந்த கொடுமைதான் இது.


மாற்று வழிமுறைகள் இருந்த போதும், மாற்று வழிகளை நாட உரியவர்களால் முடியவில்லை.


பெரும் தொழில் நிறுவனங்கள் முன் எல்லோரும் பகடைக்காய்கள் தான்.


இத்தகைய கொடுமையில்தான் மணம் வீசி மனம் நிறைய வேண்டிய


கௌரி இதழ் உதிர்ந்து சருகாகிவிட்டாள்.


அவள் நாளும் பொழுதும் நஞ்சுண்ட கண்டனை வழிபடும் பக்தை.


சிவனின் நஞ்சை பார்வதியார் தொண்டையுடன் தடுத்துவிட்டார்.


இவளில் மெல்லமெல்ல பரவிய நோயை அந்த நஞ்சுண்ட கண்டனே தடுக்கவில்லை.


தாங்க முடியாத துயரை எமக்குத்தந்துவிட்டு,


விலைமதிக்க முடியாத உயிரை கொண்டு போய்விட்டான்.


அவள் இறைவனை நம்பினாள். அவள் மீண்டு வருவாள் என நாம் நம்பினோம்.


இன்று அவள் நம்பிய இறைவனிடமே போய் சேந்துவிட்டாள்.


அவளின் குழந்தையின் வடிவில் அவளை கண்டு மனம் ஆறுவதைத்தவிர வேறு வழியில்லை


அவளின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.


திரு.நா.யோகேந்திரநாதன்.


(மூத்த ஊடகவியலாளர்)




புதன், 25 ஜனவரி, 2017

ஓம் சக்தி மகாகவி சுப்பிரமணியப் பாரதியார்

ஓம் சக்தி

மகாகவி சுப்பிரமணியப் பாரதியார்

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்

நிறைந்த சுடர்மணிப் பூண்

பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்

பார்வைக்கு நேர்பெருந்தீ

வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி

வையக மாந்தரெல்லாம்,

தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர், சக்தி

ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.



நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி

நலத்தை நமக்கிழைப்பாள்

அல்லது நீங்கும் என்றேயுல கேழும்

அறைந்திடு வாய் முரசே!

சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்குச்

சொல்லு மவர்தமையே,

அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்

ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.



நம்புவ தேவழி யென்ற மறைதன்னை

நாமின்று நம்பிவிட்டோம்

கும்பிட்டெந் நேரமும் 'சக்தி' யென் றாலுனைக்

கும்பிடு வேன்மனமே!

அம்புக்கும் தீக்கும் விடத்திற்கும் நோவுக்கும்

அச்சமில் லாதபடி

உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்

ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.



பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு

போற்றி உனக்கிசைத்தோம்

அன்னை பராசக்தி என்றுரைத்தோம்: தளை

அத்தனையும் களைத்தோம்:

சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன

மே தொழில் வேறில்லை, காண்

இன்னும் தேயுரைப் போம். சக்தி, ஓம் சக்தி

ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.



வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு

ளாக விளங்கிடுவாய்!

தௌ;ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு

விண்ணப்பஞ் செய்திடுவேண்:

எள்ளத் தனைப்பொழுதும் பயனின்றி 

இரா தென்றன் நாதவினிலே

வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல் சக்தி

வேல், சக்தி வேல், சக்தி வேல்!


புண்ணிய விளக்கம்

புண்ணிய விளக்கம்
அறுசீர்க் கழிநெடிலடி 
ஆசிரிய விருத்தம்
இராமலிங்கம் அடிகள்
திருச்சிற்றம்பலம்
பாடற்க இனிய வாக்களிக்கும்
பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற்கு இனிய அடியவர்தம்
கூட்டம் அளிக்கும் குணம் அளிகும்
ஆடற்கு இனிய நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற்கு இனிய சீர் அளிக்கும்
சிவாய நமஎன்று இடுநீறே.

கருமால் அகற்றும் பிறப்பதனைக்
களையும் நெறியும் காட்டுவிக்கும்
பெருமால் அதனால் மயக்குகின்ற
பேதை மடவார் நசையறுக்கும்
அருமால் உழந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திருமால் அயனும் தொழுது ஏத்தும்
சிவாய நம என்று இடுநீறே.

வெய்ய வினையின் வேர் அறுக்கும்
மெய்மை ஞான வீட்டில் அடைந்து
உய்ய அமல நெறிகாட்டும் 
உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும்
ஜயம் அடைந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செய்ய மலர்க்கண் மால்போற்றும்
சிவாய நம என்று இடுநீறே.

கோல மலர்த்தாள் துணை வழுத்தும்
குலத்தொண்டு அடையக் கூட்டுவிக்கும்
நீல மணிகண் டப்பெருமான்
நிலையை அறிவித்து அருள் அளிக்கும்
ஆல வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சீலம் அளிக்கும் திருவளிக்கும்
சிவாய நம என்று இடுநீறே.

வஞ்சப் புலக்காடு எறியஅருள் 
வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
கஞ்சத் தவனும் கரியவனும் 
காணற்கு அரிய கழல் அளிக்கும்
அஞ்சிற் புகுந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்சொற் புலவர் புகழ்ந்தேத்தும்
சிவாய நம என்று இடுநீறே.



கண்கொள் மணியை முக்கனியைக் 
கரும்பைக் கரும்பின கட்டிதனை
விண்கொள் அமுதை நம்மரசை
விடைமேல் நமக்குத் தோற்றுவக்கும்
அண்கொள் வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்கொள் முனிவர் சுரர்புகழும்
சிவாய நம என்று இடுநீறே.

நோயை அறுக்கும் பெருமருந்தை
நோக்கற் கரிய நுண்மைதனைத்
தூய விடைமேல் வரும் நமது
சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
ஆய வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சேய அயன்மால் நாடரிதாம்
சிவாய நம என்று இடுநீறே.

எண்ண இனிய இன்னமுதை
இன்பக் கருணைப் பெருங்கடலை
உண்ண முடியாச் செழுந்தேனை
அண்ண வினையால் நெஞ்சே நீ
அண்ண வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்ணம் அளிக்கும் திறம் அளிக்கும்
சிவாய நம என்று இடுநீறே.

சிந்தா மணியை நாம்பலநாள்
தேடி எடுத்த செல்வமதை
இந்தார் வேணி முடிக்கனியை
இன்றே விடைமேல் வரச்செய்யும் காண்
அந்தோ வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செந்தா மரையோன் தொழுது ஏத்தும்
சிவாய நம என்று இடுநீறே.


உள்ளத் தெழுந்த மகிழ்வை நமக்கு
உற்ற துணையை உள்ளுறவைக்
கொள்ளக் கிடையா மாணிக்கக்
கொழுந்தை விடைமேற் கூட்டுவிக்கும்
அள்ளல் துயரால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தௌ;ளல் கடலான் புகழ்ந்து ஏத்தும்
சிவாய நம என்று இடுநீறே.


ஊற்ற இடத்தில் உதவ நமக்கு
உடையோர் வைத்த வைப்பதனைக்
கற்ற மனத்திற் புகும் கரனைக்
கனியை விடைமேல் காட்டுவிக்கும்
அற்றம் அடைந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்றம் அகற்றித் திறல் அளிக்கும்
சிவாய நம என்று இடுநீறே.

திருச்சிற்றம்பலம்.

திருக்கேதீஸ்வரம்

திருக்கேதீஸ்வரம்

பண் : நட்டராகம

விருதுன்றா மேருவினாணர வாவனலெரியம்பாப்

பொருதுமூவேயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி பெந்நாளும்

கருகின்றவூர் கனைகடற்கடிகமழ் பொழிலணி மாதோட்டம்

கருதநின்றகே தீச்சரங்கை கைதொழக் கடுவினையடையாவே



பாடல்வீணையர் பலபலசரிதைய ரெருகைத் தருநட்டம்

ஆடல்பேணுவ ரமரர்கள் வேண்டநஞ சுண்டிருள் கண்டத்தார்

ஈடமாவது விருக்கடற்கரையினி லெழிற்கழ் மாதோட்டங்

கேடிலாதகே தீச்சரந்தெழக் கெடுமிடர் வினை தானே



பெண்ணொர்பாகத்தர் பிறைதவழ்சடையின் ரறைகழல் சிலம்பார்க்கச்

சுண்ணமாதரித் தாடுவர்பாடுக ரகந்தொறு மிடுபிச்சைக்

குண்ணலாவதோ ரிச்சையினுழல்பவ ருயர்தரு மாதோட்டத்

தண்ணன்ணுகே தீச்சரமடைபவர்க் கருவினை யடையாவே



பொடிகொண்மேனியர் புலிதளரையினர் விரிதருகரத்தோறும்

வடிகொண்மூவிலை வேலினர் நூலினர் மறிகடன் மாதோட்டத்

தடிகளாதரித்திருந்த திருக்கேதீச்சரம் பரிந்த சிந்தையராகி

முடிகள் சாய்த்தடி பேணவல்லார்தம்மேன் மொய்தெழும் வினைபோமே



நல்லராற்றவு ஈனநன்குடையர் தம்மடைத்தவர்க் கருளிய

வல்லர்பார்மிசை வான்பிறப்பிறப்பிலர் மலிகடன் மாதோட்டத்

தெல்லையில்புக ழெந்தைகேதீச்சர மிராப்பகநினைந்தேத்தி

அல்லலாசறுத் தரனடியினை தொழு மரன்பரா மடியாரே.



பேழைவார்சடைப் பெருந்திருமகடனைப் பொருத்த வைத்தொருபாகம்

மாழையற்கயற் கண்ணிபாலருளிய பொருளினர் குடிவாழ்க்கை

வாழையம்பொழின் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டங்

கேழல்வெண்மருப் பணிந்த நீண்மார்பர்கே தீச்சரம்பிரியாரே.





பண்டுநால்வருக் கறமுலைத்த தருளிப்பல் லுலகினி லுயிர்வாழ்க்கை

கண்டநாதனார் கடலிடங்கைத்தொழக் காதலித்துறைகோயில்

வண்டுபண்செயு மாமலர்ப்பொழின் மஞ்ஞை நடமிடுமாதோட்டம்

தொண்டர் நாடொறுந் துதிசெயவருள்செய் கேதீச்சரத்தானே



தென்னிலங்கையர் குலபதிமலை நலிந்தெடுத்தவன் முடிதிண்டோ

டன்னலங்கெட வடர்த்தவற் கருள்செய்த தலைவனார்கடல்வாயப்

பொன்னிலங்கிய முத்துமாமணிகளும் பொருந்தியமாதோட்டத்

துன்னியன்பொடு மடியவரிறைஞ்சுகே தீச்சரத்துள்ளாரே.



பூவுளானும் பொருகடல் வண்ணனும் புவியிடந்தெழுந்தோடி

மேவிநாடின் னடியினை காண்கிலா வித்தக மென்னாகும்

மாவும் பூகமும் கதலியுநெருங்குமா தோட்ட நன்னகர்மன்னித்

தேவி தன்னொடுந் திருந்துகேதீச்சரத் திருந்த வெம்பெருமானே.



புத்தராய்ச்சில புனைதுகிலுடையவர் புறனுரைச் சமணாதர்

எந்தராகிநின் றுண்பவரியம்பிய வேழைமை கேளேன்மின்

மத்தயானையை மறுகிடவுரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்

தத்தர்மன்னுபா லாவியின் கரையிற்கே தீச்சரமடைமின்னே.



மாடெலாமண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டத்

தாடலேறுடை யண்ணல்கேதீச்சரத் தடிகளை யணிகாழி

நாடுகளார்க்கின்ற ஞானசம்பந்தன்சொன் னவின்றெழுபாமாலைப்

பாடலாயின பாடுமின்பத்தர்கள் பரகதிபெறலாமே.



திருச்சிற்றம்பலம்


சனி, 21 ஜனவரி, 2017

லிங்காஷ்டகம்



பிரம்ம முராரி ஸூரார்சித லிங்கம்

நிர்மல பாஷூர சோபித லிங்கம்

ஜன்மஜதுக்க விநாசக லிங்கம்

தத்பிரணமாமி ஜதாசிவ லிங்கம்


தேவ முனிப்பிரவார்ச்சித லிங்கம்

காம தஹம் கருணாகர லிங்கம்

ராவண தர்ப்ப விநாசன லிங்கம்

தத்பிரணமாமி ஸதாசிவ லிங்கம்


ஸர்வஸூகந்தி ஸூலேபித லிங்கம்

புத்தி விவர்த்தன் காரண லிங்கம்

ஸித்த ஸூராஸூர வந்தித லிங்கம்

தத்பிரணமாமி ஸதாசிவ லிங்கம்



குங்கும சந்தண லேபித லிங்கம்

பங்கஜ ஹார ஸூசோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம்

தத்பிரணமாமி ஸதாசிவ லிங்கம்


தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்

பாவன பக்தி ப்ரவேச லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம்

தத்பிரணமாமி ஸதாசிவ லிங்கம்


அஸ்டதளோபரி வேஷ்டித ஸேவித லிங்கம்

ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்

அஸ்டதரித்திர விநாசித லிங்கம்

தத்பிரணமாமி ஸதாசிவ லிங்கம்


ஸூரகுரு ஸூர்வர பூஜித லிங்கம்

ஸரவண புஸ்ப ஸதாசிவ லிங்கம்

பராத்பரம் பரமாத்மக லிங்கம்

தத்பிரணமாமி ஸதாசிவ லிங்கம்


நோன்புக் கயிற்றின் இருபத்தொரு முடிச்சுக்களுக்கும் உரிய பூஜை

நோன்புக் கயிற்றின் இருபத்தொரு முடிச்சுக்களுக்கும் உரிய பூஜை

ஓம் சிவாய சிவாய நம

ஓம் சாந்தாய சாந்தாய நம

ஓம் மகாதேவாய மகாதேவ்வியை நம

ஓம் விருஷத்துவஜாய விருஷபத்துவ ஜாயாயை நம

ஓம் கௌPசாய கௌர்யை நம

ஓம் ருத்தியாய ருத்திராண்யை நம

ஓம் பசுபதயே பசுபதயாயை நம

ஓம் பீமாயபீமாயை நம

ஓம் திரியம்பகாய திரியம்பகியை நம

ஓம் நீலலோகிதாய நீலலோகிதாயை நம

ஓம் ஹராய ஹராயை நம

ஓம் ஸ்மரகராய ஸ்மகராயை நம

ஓம் பிரார்க்கர்ய பிரார்க்காயை நம

ஓம் சம்பவே சாம்பவ்வியை நம

ஓம் சர்வாய சர்வாண்ணியை நம

ஓம் சதாசிவாய சதாவாயை நம

ஓம் ஈஸ்வராய ஈஸ்வர்யை நம

ஓம் உக்கிராய உக்கிராண்ணியை நம

ஓம் ஸ்ரீ கண்டாய சுகபோலாயை நம

ஓம் நீலகண்டாய கம்புகண்டியை நம

ஓம் மிருத்தியஞ் ஜயாயகாத்தியாஜின்னியை நம


சிவத்தியான ஸ்தோத்திரம்



சிவத்தியான ஸ்தோத்திரம்
தியாயேத் நித்தியம் மகேசம ரஜதகிரிநிபம்

சாரு கந்திரா வதம்சம்

ரத்தினா கல்போச் ஜீவலாங்கம் பரசுமிருகவரா

பீதிகஸ்தகம் பிரசன்னம்

பத்மாசனஸ்தம் சசாம்பம் ஸ்துத அமரகணேகிர்

வியாக்கிற கிறுத்திம் வசானம் அமரகணேகிர்

விஸ்வாத்தியம் விஸவ்வந்தியம் நிகிலபயகரம்

பஞ்சவக்திறம் திறிநேத்திரம்



ஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி



ஓம் சிவாய நம ஓம் உத்ராய நம

ஓம் மஹேசவராய நம      ஓம் காபலினே நம

ஓம் சம்வவே நம ஓம் காமாரயே நம

ஓம் பிநாகினே நம ஓம் அந்தகாஸூரஸூதனாய நம

ஓம் சசிசேகராய நம ஓம் கங்காதாரய நம

ஓம் வாமதேவாய நம ஓம் லலாடாஷாய நம

ஓம் விரூபஷhய நம ஓம் காலகாலாய நம

ஓம் கபர்த்தினே நம ஓம் க்ருபாநிதய நம

ஓம் நீலலோஹிதாய நம ஓம் பீமாய நம

ஓம் சங்கராய நம ஓம் பரசுஹஸ்தாய நம

ஓம் சூலபாணயே நம ஓம் மருகபாணயே நம

ஓம் கட்வாங்கினே நம ஓம் ஜடாதராய நம

ஓம் விஷ்ணுவல்லபாய நம ஓம் கைலாஸவாஸினே நம

ஓம் சிபிவிஷ்டாய நம ஓம் கவசினே நம

ஓம் அம்பிகாநாதாய நம ஓம் கடோராய நம

ஓம் ஸ்ரீ கண்டாய நம ஓம் த்ரிபுராந்தகாய நம

ஓம் பக்தவத்ஸலாய நம ஓம் வ்ருஷாங்காய நம

ஓம் பவாய நம ஓம் பஸ்மோத்தூலித-

ஓம் சர்வாய நம விக்ர ஹாய நம

ஓம் த்ரிலோகேசாய நம ஓம் ஸாமப்ப்ரியாய நம

ஓம் சிதிகண்டாய நம ஓம் ஸ்வர மயாய நம

ஓம் சிவப்பிரியாய நம ஓம் திரயிமூர்த்தயே நம

ஓம் அநீச்வராய நம ஓம் ருத்ராய நம

ஓம் ஸர்வஜ்ஞாய நம ஓம் பூதபதயே நம

ஓம் பரமாத்மனே நம ஓம் ஸ்தாணவே நம

ஓம் ஸோமஸுர்யாக்னிலோசனாய நம

ஓம் அஹயேபுத்னயாய நம

ஓம் ஹவிஷே நம ஓம் திகம்பராய நம

ஓம் யஜ்ஞமயாய நம ஓம் அஷ்டமூர்த்தயே நம

ஓம் ஸோமாய நம ஓம் அநோகாத்மனே நம

ஓம் பஞ்சபத்திராய நம ஓம் ஸாத்விகாய நம

ஓம் ஸதாசிவாய நம ஓம் சுத்தவிக்ரஹாய நம

ஓம் விஸ்வேஸ்வராய நம ஓம் சாஸ்வதாய நம

ஓம் வீரபத்ராய நம ஓம் கண்டபரசவே நம

ஓம் கணநாதாய நம ஓம் அஜயாய நம

ஓம் ப்ரஜாபதயே நம ஓம் பாபவிமோசநாய நம

ஓம் கிரண்ய ரேதசே நம ஓம் மிருடாய நம

ஓம் துர்த்தர்ஷாய நம ஓம் பசுபதயே நம

ஓம் கிரீசாய நம ஓம் தேவாய நம

ஓம் கிரிசாய நம ஓம் மஹாதேவாய நம

ஓம் அனகாய நம ஓம் அவ்வியயாய நம

ஓம் புஜங்கபூஷ்ணாய நம ஓம் ஹராய நம

ஓம் பர்க்காய நம ஓம் பூஷதந்தபிதே நம

ஓம் கிரிதன்வனே நம ஓம் அவ்யய நம

ஓம் கிரிப்ரியாய நம ஓம் ஹராய நம

ஓம் க்ருத்திவாஸஸே நம ஓம் பகநேத்ரபிதே நம

ஓம் புராராதயே நம ஓம் அவ்யக்தாய நம

ஓம் பகவதே நம ஓம் தஷாத் வரகராய நம

ஓம் ப்ரமதாதிபாய நம ஓம் ஸஹஸ்ராஷாய நம

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம ஓம் ஸஹஸ்ரபதே நம

ஓம் ஸுஷமதனவே நம ஓம் அபவர்க்கப்ரதாய நம

ஓம் ஜகத்வ்யாபினே நம ஓம் அனந்தாய நம

ஓம் ஜகத்குரவே நம ஓம் தாரகாய நம

ஓம் வ்யோகேசாய நம ஓம் பரமெஸ்வராய நம

ஓம் மஹாஸேனஜனகாய நம

ஓம் சாருவிக்ரமாய நம