கேதாரீஸ்வரர் பூஜாவிதி
பூஜாரம்பத்தில் மஞ்சளால் விநாயகரைச் செய்வித்து கந்தம், புஸ்பம், அறுகு சாத்தி நோன்பு நோற்பவர்கள் கையில் புஷ்பம் கொடுத்து விநதயகரை அர்ச்சனை செய்விக்க வேண்டும். அதற்குரிய மந்திரங்களாவன.
ஓம் சுமுகாய நம ஓம் தூமகேதுவ நம
ஓம் ஏகதந்தாய நம ஓம் கணதயஷாய நம
ஓம் கபிலாய நம ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜகர்ணகாய நம ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் லம்போதராய நம ஓம் சூர்ப்பகர்ணாய நம
ஓம் விகடாய நம ஓம் ஹேரம்பாய நம
ஓம் விக்நராஜாய நம ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம
ஓம் விநாயகாய நம ஓம் மகாமணாதிபதயே நம
எனும் சோடச நாமங்களை ஓதி நாணாவித புஸ்பமிட்டு தூபம் ஆக்கிராபயாமி, தீபம் தர்சயாமி என்று சொல்லி தூப தீபம் காண்பித்து தட்சணை, தாம்பூலம், நைவேத்தியம் வைத்து தீபாராதனையான பிறகு ஸ்ரீ கேதாரீஸ்வரரை ஆவாகணஞ் செய்ய வேண்டும். அதாவது அம்மியையும் குளவியையும் அலங்கரித்து அம்மியின் மேல் குளவியை நிறுத்தி குங்குமம், கந்தம் முதலிய பரிமள திரவியங்களை அணிவித்து பருத்தி மாலையிட்டு, புஸ்பம் சாத்தி அதனெதிரில் கலசம் நிறுத்தி அதற்கும் பருத்தி மாலையிட்டு, புஸ்பம் சாத்தி நோன்பு விரதம் அனுஷ்டிப்பவரை அங்கே அமரச் செய்து கேதாரீஸ்வரரை மனதிலே தியானஞ் செய்து கொள்ளச் சொல்லி காசி, கங்கா தீர்த்த திருமஞ்சனமாட்டியது போலும் பட்டு பீதாம்பரம் ஆபரணாதிகளால் அலங்கரித்தது போலும் மனதில் சங்கல்பஞ் செய்து கொள்ளச் சொல்லி வில்வம், தும்பை, கொன்றை ஆகிய மலர்களால் ஈஸ்வரரைக் கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்விக்க வேண்டும்.
ஓம் சிவாய நம ஓம் மானந்திராய நம
ஓம் கேசவாய நம ஓம் சிவாய நம
ஓம் ருத்ராய நம ஓம் சதாசிவாய நம
ஓம் சங்கராய நம ஓம் அச்சுதாய நம
ஓம் நீலகண்டாய நம ஓம் நிர்மலயா நம
ஓம் நாரயணாய நம ஓம் அரூபாய நம
ஓம் கிருஷ்ணாய நம ஓம் ஆனந்தரூபாய நம
ஓம் பத்மநாபாய நம ஓம் கோவிந்தாய நம
ஓம் கங்காதராய நம ஓம் சூலபாணயே நம
ஓம் கைலாசவாசாய நம ஓம் ஈசாந்யாய நம
ஓம் திரிசூலாய நம ஓம் சிவபூஜாய நம
ஓம் மடுவேந்திராய நம ஓம் காலகண்டாய நம
ஓம் கபாலமூர்த்தியே நம ஓம் தாமோதராய நம
ஓம் பரமகுருவே நம ஓம் பார்வதிபிரானேசாய நம
ஓம் சாந்தருத்ராய நம ஓம் சற்குருவாய நம
ஓம் மார்கண்டாய நம ஓம் நந்திகேஸ்வராய நம
ஓம் திரிபுரதஹனாய நம ஓம் கேதாரீஸ்வராய நம
என்று அர்ச்சனை செய்வித்து அவர்கள் கையில் புஸ்பம் அஷதை கொடுத்து மும்முறை பிரதர்ஷணம் செய்வித்து கையில் உள்ள புஷ்ப அஷதையை சுவாமியின் மேல் போடச் செய்து தூப தீபங் காட்டி நைவேத்தியம், தாம்பூலம் சமர்ப்பித்து கற்பூர தீபாராதனை காண்பித்து அவர்களுக்கு நோன்புக் கயிறும் புஷ்பமும் அஷதையும் சிரசின் மேல் போட்டுக் கொண்டு நோன்புக் கயிற்றைக் கட்டிக் கொள்ள வேண்டும்.
ஆலய வழிபாடு
திருக்கோயில்
இறைவன் அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கின்றார். கன்று ஈன்ற பசுவின் பால் உடல் முழுவதிலும் பரந்திருப்பினும் அதன் முலையிலிருந்து மட்டும் பால் சுரப்பது போல் எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்திருப்பினும் திருக்கோவில்களில் ஆன்மாக்களாக்கிய எமக்கு அருள்புரியும் பொருட்டு விளங்கித் தோன்றி அருள் சுரக்கின்றார்.
கோவிலுக்குச் செல்லும் முறை
அதிகாலையில் எழுந்து பரிசுத்தமான நீர் நிலையில் நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு சமய தீட்சை பெற்றவராயின் திரிபுண்டரமாகவும் ஏனையோர் உத்தூளனமாகவும் வீபூதியைத் தரித்துக் கொண்டு தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, குங்குமம், சந்தனம், வீபூதி, ஊதுபத்தி, சூடம், பூ, மாலை போன்ற அர்ச்சனைப் பொருட்களைச் சுத்தமான பாத்திரத்தில் வைத்து எடுத்துக் கொண்டு உலக நிகழ்ச்சிகளில் மனதைச் செலுத்தாது நாம் வழிபடும் தெய்வத்தின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும் பன்னிரு திருமுறைகளை மனதில் பாராயணம் செய்து கொண்டும் செல்லல் வேண்டும். திருக்கோயிலை அண்மித்ததும் அங்குள்ள திருக்குளத்திலோ, கிணற்றிலோ கைகால்களைக் கழுவி ஆசமனஞ் செய்து தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்துச் சிவநாமங்களை உச்சரித்து கொண்டு உள்ளே போதல் வேண்டும்.
வழிபடும் முறை
பலிபீடத்திற்கு இப்பால் வீழ்ந்து வணங்குதல் வேண்டும். கிழக்கு மேற்கு நோக்கிய சந்நிதானங்களில் வடக்கே தலை வைத்து வணங்குதல் வேண்டும். வடக்கு தெற்கு நோக்கிய சந்நிதானங்களில் கிழக்கே தலை வைத்து வணங்குதல் வேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி வணங்குதல் கூடாது. ஆடவர்கள் அஸ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். அட்டாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிரண்டு, புயங்கள் இரண்டு, மேவாய், செவியிரண்டு என்னும் எட்டவயமும் நிலத்திலே பொருந்தும்படி பூமியிலே சிரசை வைத்து மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையை பின்னும் நேரே நீட்டி பின் அம்முறையை மடக்கி வலப்புயமும் இடப்புயமும் நிலத்திலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டி வலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் நிலத்திலே பொருந்தச் செய்து வணங்குதல் வேண்டும். பெண்கள் பஞ்சாங்க வணக்கம் செய்தல் வேண்டும். பஞ்சாங்க வணக்கமாவது தலை, கையிரண்டு, முழங்கால் இரண்டு என்னும் ஐந்து அவயமும் நிலத்திலே பொருந்தும் படி வணங்குதல் ஆகும். இவ்வாறு பலிபீடத்திற்கு முன் அபிஷேக நிவேதன சமயம் அல்லாத நேரத்தில் வணக்கம் செய்த பிறகு திருக்கோயில் வீதியை வலம் வருதல் வேண்டும்.
இரண்டு கைகளையும் சிரசிலேனும் மார்பிலேனும் குவித்து சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு கால்களை மெல்ல வைத்து மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது முறை வீதியை வலம் வருதல் வேண்டும். முதன் முதலில் விநாயகரை வணங்குதல் வேண்டும். அப்போது கை விரல்களை மடித்து முட்டியாக பிடித்துக் கொண்டு இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி வலக்காதை இடக்கையினாலும் இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு குதிக்கால்களில் பின்பகுதி முட்டும் வரை மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும். விநாயகரை தரிசனம் செய்த பின் நந்தியெம்பெருமானையும் துவார பாலகரையும் வணங்கி அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும். மூலமூர்த்தியாகிய சிவனைத் தரிசனம் செய்த பின் பரிவார மூர்த்திகளாகிய தட்சனாமூர்த்தி, சோமஸ்கந்தர், சந்திரசேகர், புவனேஸ்வரி, வேணுகோபாலர், மகாலக்சுமி, கண்ணகி, ஆறுமுகக் கடவுள், வைரவர், வீரபத்திரர், நவக்கிரக நாயகர்கள், நாகதம்பிரான் போன்ற ஏனைய திருவுருவங்களை தரிசனம் செய்தபின் இறுதியாக சண்டேசுவரர் சந்நிதியை அடைந்து அப்பெருமான் சதா நிஷ்டையில் இருப்பதால் மூன்று முறை கை தட்டிப் பிரார்த்தனைப் பலனைத் தரும் பொருட்டு வணங்குதல் வேண்டும். உடையில் உள்ள நூல்களைப்; பிடுங்கி அர்ப்பணம் செய்தல் கூடாது. மூலமூர்த்திக்கும் சண்டேஸ்வரருக்கும் குறுக்கால் செல்லல் கூடாது. இவர் மூலமூர்த்தி ஆண் தெய்வமானால் சண்டேஸ்வரர் என்றும் பெண் தெய்வமானால் சண்டேஸ்ரி என்றும் அழைக்கப்படுவர்.
தமிழ் வேதமாகிய பஞ்ச புராணத்தை ஓதும் போது அடக்க ஒடுக்கமாக நின்று முதலில் திருச்சிற்றம்பலம் எனக் கூறிப் பின் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம், வாழ்த்து ஆகிய மனங்கசிந்துருக கண்ணீர் மல்க, உரோமம் சிலிர்ப்ப, பண்ணிசையோடு பேணுதல் வேண்டும். வீட்டிலிருந்து கொண்டு சென்ற அர்ச்சனைப் பொருட்களை பூசகரிடம் கொடுத்து இஷ்ட தெய்வத்திற்கு அர்ச்சித்ததும் கோவில் பூசகரால் கொடுக்கப்படும் பிரசாதங்களை அடக்கமாக நின்று இரண்டு கைகளையும் நீட்டி வலக்கையை மேலும் இடக்கையை கீழும் வைத்து வீபூதியை வாங்கி வடக்கு முகமாகவோ கிழக்கு முகமாகவோ நின்று அண்ணாந்து கொண்டு சிவ சிவ என்று உச்சரித்தபடி மூன்று விரல்களால் வீபூதியை நெற்றியின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரையும் துலக்கமாக பூசுதல் வேண்டும். ஒரு இரு விரல்களால் பூசுதல் ஆகாது. மிகுதியான விபூதியை நிலத்தில் சிந்தாமல் அதை பவுத்திரப்படுத்தி வைத்திருத்தல் வேண்டும். சந்தனம், குங்குமத்தை நெற்றியில் இட்ட பின் மிகுதியை கோவில் தூண், சுவர், மதில் போன்றவற்றில் பூசுதல் கூடாது. பத்திர புஷ்பங்களை நிலத்தில் சிந்துதல், அவற்றை காலால் மிதித்தல் மகாபாவச் செயலாகும். அதன்பின் தரும் தீர்த்தம் பஞ்சாமிர்தம் என்பவற்றை அருமருந்தாக அமிர்தமாக உண்டபின் வாய் கைகளைச் சுத்தம் செய்த பின் பலிபீடத்தடிக்கு வந்து மீண்டும் கீழே விழுந்து வணங்கி அங்கு நின்று சுவாமி தரிசனம் செய்து உத்தரவு பெற்றுக் கொண்டு அதிலிருந்து அகன்று ஒரு புறம் போக்கான இடத்திலிருந்து கொண்டு பஞ்சாட்சரத்தை இயன்றளவு ஓதுதல் வேண்டும். இல்லற மேம்பாட்டிற்காக நகராதி பஞ்சாட்சரமாகிய நமசிவாய எனும் ஐந்தெழுத்தைச் செபமாலை மணிகளைக் கீழ் நோக்கித் தள்ளிய வண்ணம் செபிக்க வேண்டும். துறவற மேம்பாட்டிற்காக முத்தியின்பம் பெறும் பொருட்டு சிகராதி பஞ்சாடசரமாகிய சிவாயநம என்னும் சிவமூல மந்திரத்தை செபமாலை மணிகளை மேல் நோக்கி நகர்த்தியவாறு செபிக்க வேண்டும். இறுதியாக அர்ச்சனைப் பொருட்களுடன் திருக்கோவிலிலிருந்து வெளியேறி மீண்டும் தூலலிங்கமாகிய கோபுரத்தைத் தரிசித்துக் கொண்டு தெய்வ சிந்தனையுடன் வீடேகுதல் வேண்டும். கோவிலிலிருந்து பெறப்பட்ட பாதித் தேங்காய்களை மாமிச உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தலாகாது.
திருத்தொண்டுகள்
கூட்டுதல், கழுவுதல், பத்திரபுஷ்பம் கொடுத்தல், திருமாலை கட்டுதல், சுகந்ததீபம் இடுதல், திருவிளக்கேற்றுதல், பூசைத் திரவியங்கள் எடுத்தல், தீவர்த்து, குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், சாமரம் வீசுதல், சுவாமியைத் தாங்கி வீதி வலம் வருதல், சுவாமியின் பின் பக்கமாகச் சென்று இசையுடன் கூட்டுப் பிரார்த்தனை செய்தல், திருவீதியில் உள்ள புல் பூண்டுகளைச் செருக்குதல், திருக்கோபுரத்திலும் மதில் சுவர்களிலும் ஏனைய கட்டடங்களிலும் உண்டாகும் ஆல், அரசு, வேம்பு முதலியவற்றை வேரோடு களைதல், நந்தவனம் அமைத்தல், திருக்கோவில், திருக்குளம், திருவீதி போன்றவற்றை எல்சில், மலசலம் முதலியவற்றினால் அசுத்தமடையா வண்ணம் பாதுகாத்தல்